இலக்கியத்தைப் பற்றியும், இலக்கியம் தொடர்புடையவை பற்றியும் ஓர் இலக்கிய வாசகராகவும் எழுத்தாளராகவும் கடந்த 12 ஆண்டுகளில் ஆசை எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அந்த வகையில், படைப்பாளியின் குரலும் இலக்கிய வாசகரின் ரசனையும் பத்திரிகையாளரின் தகவல் நோக்கும் ஒருங்கிணையும் கட்டுரைகள் இவை. அந்த ஒருங்கிணைவு இத்தொகுப்பைத் தனித்துவமிக்கதாக மாற்றுகிறது.
தமிழ்ப் புனைவுகள், தமிழ்க் கவிதைகள், உலக இலக்கியம், இந்திய இலக்கியம், மொழிபெயர்ப்பு, பதிப்புத்துறை என வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் இக்கட்டுரைகள், நம்மை வெவ்வேறு உலகம், வெவ்வேறு காலகட்டம், வெவ்வேறு தலைமுறைகள், வெவ்வேறு பார்வைகள், வெவ்வேறு கனவுகள் என இலக்கியச் சுழலுக்குள் அழைத்துச் செல்கின்றன. ஆம், பேபல் நூலகம் போலத்தான்.
No product review yet. Be the first to review this product.