மரணமும் இறப்பும் ஒன்றா, வேறுவேறா? மனம் என்றால் எது? அது உடம்பின் உள்ளே இருக்கிறதா, வெளியிலா? பேய் என்ற ஒன்று எல்லா காலத்திலும் உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே, எப்படி? எல்லா கேள்விகளுக்குமான நியாய எதார்த்த தன்மையுடன் கூடிய பதில் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் தனது இறப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ளமுடியுமா? முடியும் என்கிறது நாவல். அந்த காலத்து சித்தர்கள் அதைச் சாதித்துக்காட்டிய விதமும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
“ஆதுர சாலை” ஒரு மருத்துவநாவல். இந்திய மண்ணின் மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றின் மேனியை அரித்து அழித்துவிட்ட கறையானாக அலோபதி திகழ்வதை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் விவரிக்கிறது.
எழுத்தாளர்.தேனி சீருடையான்.