செல்வச் செழிப்பும், மிகுந்த வசதிகளும் கொண்ட மேட்டுக்குடிகளாக தாம் வாழ்வதாக, அடுத்தவர்களின் பார்வைக்குக் காட்டப் பாடுபடும் பரிதாபத்துக்குரிய மத்திய தரப்பினரின் ஜீவிதங்கள், போலி மற்றும் வீண் பகட்டுகளின் மீது கட்டியெழுப்பப்பட்டவை.
அதை அவர்களே அறிவார்கள் எனினும் மீள வழியற்று அதிலேயே புதைந்து போயிருக்கிறார்கள். நகரத்துக்கும், கிராமத்துக்குமிடையே மானசீகமாக அலையடித்துக் கொண்டிருக்கும் அவ்வாறானவர்களின் ஜீவிதங்கள் மீது சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசார அதிர்வுகள் திணிக்கும் தாக்கங்களை இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் மறைமுகமாக
எடுத்துரைக்கின்றன.
No product review yet. Be the first to review this product.