Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

யாதும்

(0)
yathum
Price: 350.00

Weight
100.00 gms

கருட வாகனத்தில் பெருமாள் எடுத்துச் செல்லப்படும் காட்சியுடன் துவங்கியிருக்கிறார் அன்வர். மேளம் முழங்க ஊர்வலம் அங்குள்ள மசூதியைத் தாண்டிச் செல்கிறது. பின்னர் அங்கிருந்து பாங்கு ஒலிக்கிறது. இடையே எந்தச் சிக்கலும் இல்லை.
தமிழக இஸ்லாமியர்களின் வாழ்க்கையையும் வழிபாட்டையும் சித்திரிக்கும் இந்தக் குறும்படம், பல நூறு ஆண்டுகளுக்கு முன் குறுமிளகு, ஏலக்காய் வர்த்தகத்தின் மூலம் இந்தியாவின் தென்பகுதியில் இருந்த இஸ்லாமியர் சீனாவுடனும், ஐரோப்பாவுடனும், மேற்கு ஆசியாவுடனும் கொண்டிருந்த வணிக உறவைத் தெளிவாகச் சொல்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் இஸ்லாம் வேர் விட்டதையும் அந்தந்தப் பகுதியின் கலாசாரத்தை ஒட்டிக் கட்டப்பட்ட மசூதி அல்லது பள்ளிவாசல்களைப் பற்றி, அரிய தகவல்களைத் தருகிறார் அன்வர்.
ஆறேழு வருடங்களை ஆராய்ச்சிக்காகவே அன்வர் செலவிட்டிருக்கிறார். பிறகு செய்திகளை எல்லாம் முறைப்படுத்திக் குறும்படம் தயாரிக்க இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.  அதனால் எந்தவொரு தகவலையும் ஆதாரபூர்வமாகவே தந்திருப்பதைப் பாராட்ட வேண்டும். இஸ்லாமியத் தமிழர்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றியும், அவர்கள் பிற சமூகத்தினரோடு ஒட்டி வாழ்ந்த வாழ்க்கையையும் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் அன்வர்.
""எங்கள் பகுதி நாயுடு இன மக்கள், இஸ்லாமியர்களுடன் கொண்டிருந்தது மாமன்-மச்சான் உறவு. வீட்டுச் சடங்குகளின் போது, மாமன் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் தங்களுடையதாகக் கருதி எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள்'' என்கிறார் எழுத்தாளரும் புகைப்படக்காரருமான பொன்ஸீ.  தமிழ் நாவலாசியர் ஜோ டி க்ரூஸ், ""தன் கடலோர கிராமத்தில் மஸ்கோத் அல்வா விற்கும் முஸ்லிம் கிழவர், நேராக மீனவர் குடும்ப அடுக்களைக்குச் சென்று தட்டை எடுத்து வைத்துக் கொண்டு உரிமையோடு உண்ணும் செய்தியும் அத்தகைய உறவைக்  குறிப்பிடுகிறது'' என்கிறார்.
இந்த ஆவணப்படத்தில் நம்மை அசர வைப்பது பிரம்மாண்டமான பள்ளிவாசல்கள். அதிலும், உள்ளே சிவப்பு மற்றும் பச்சைக் கம்பளங்களும், ஒளி விளக்குகளும் பளபளவென்று ஜொலிக்கப் படமாக்கப்பட்டிருக்கின்றன.
கேரள பள்ளிவாசல்கள் அந்தப் பகுதி சம்பிரதாயப்படி மரங்களால் இழைத்துக் கட்டப்பட்டிருப்பதும், நம் தமிழக ஊர்களில் திராவிட-இஸ்லாமிய  கலாசாரப் பொலிவுடன் கட்டப்பட்டிருப்பதும் அன்வரின் கை வண்ணத்தில் பளீரிடுகின்றன. 
இந்துக் கோயில்கள் கற்றளிகள் எனப்படும் கல்லால் ஆன படைப்புகள் என்றால், இஸ்லாமியப் பள்ளிவாசல்களும் அவ்வாறே அந்தக் காலகட்டங்களில் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. ஆழ்வார்திருநகரியிலுள்ள இருவகைக் கோயில்களையும் அன்வரின் படம் காண்பிக்கின்றது.
இந்துக் கோயில்களின் தூண்களில் மனித உருவங்கள் இடம் பெற்றிருக்க, இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் தூண்களில் அந்த அம்சம் இருப்பதில்லை. காயல்பட்டினம், கீழக்கரை ஆகிய ஊர்களில் உள்ள பள்ளி வாசல்களை, அற்புதமான கல்லுப்பள்ளிகள் என்று சொல்லலாம்.
தமிழ் மாதங்களின் பெயர்கள் எழுதப்பட்டு, தொழுகை நேரத்தைக்கூடத் தமிழ் எண்களிலேயே ஒரு பள்ளிவாசல் பலகையில் குறித்திருப்பது வியப்பைத் தருகிறது. திருவிழாவில் கிளாரினெட்டும் மேளமும் ஒலிக்க நாகூர், பழவேற்காடு, என்று அன்வரின் கேமரா பயணம் செய்கிறது.
ஆனால் இரண்டு காட்சிகளை மட்டும் இங்கே அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் புராணக் கதையை மதுரையில் விழாவில் நடத்தும் முன்பு, யாக குண்டத்தைச் சுற்றி ஒரு வகை வேலி அமைப்பது ஒரு முஸ்லிம் குடும்ப பரம்பரை முறையாம். இறைவனாக வருபவர் அசதியுடன் படுத்துத் தூங்குவதும், மன்னர் அங்கே வருவதும் எல்லாம் கதைப்படி முடிந்த பிறகு, அந்த முஸ்லிம் இளைஞருக்குக் கோயில் மரியாதை செய்யப்படுகிறது.  இதை என் அப்பாவின் தாத்தா செய்து கொண்டிருந்தார். என் தாத்தா செய்தார். பிறகு என் தந்தை செய்து வந்தார். இப்போது நான் செய்கிறேன்.
இனி அடுத்ததாக என் பிள்ளைகள் செய்வார்கள் என்று கூடவே நிற்கும் தன் மகனைக் கட்டிக்கொண்டு  சொல்கிறார் அந்த இஸ்லாமிய இளைஞர்.
இன்னொன்று, குமரியைச் சேர்ந்த அபுபக்கர் பாடும் சுத்தமான கர்நாடக இசை உருவிலியாய், உணர்விலியாய் என்று இவர் பாடும் காபி ராகப் பாடலும், தொடர்ந்து பாகேஸ் ராகப் பாடலும் முறையாகக் கர்நாடக இசை பயின்ற முஸ்லிம்களும் உண்டு என்ற செய்தியைத் தெரிவிக்கின்றன.
கோம்பை எஸ். அன்வர் தன் வேரின் தேடலைப் படம் பிடித்துக் காட்டும்  "யாதும்' இரு விஷயங்களைத் தெளிவாகச் சொல்கிறது: அன்றைக்கு மதங்களுக்கு இடையேயான பிணைப்பையும், மக்களுக்கு இடையேயான பிணைப்பையும் சடங்குகளும், திருவிழாக்களும் காப்பாற்றி வந்திருக்கின்றன என்பதோடு, மனித உறவுகளுக்குள் மதங்கள் நுழையவில்லை.
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற நிறைவான வாசகம் அன்வரின் "யாதும்' தலைப்பை நியாயப்படுத்துகிறது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.