Loading... Please wait...

Category

Our Newsletter


பட்டாம் பூச்சி

  • PattamPoochi-Ra.Ki.Rangarajan-buy tamil books
Price:
Rs.400.00
Cash on delivery availability:
Weight:
740.00 Grams
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர் : பட்டாம் பூச்சி
ஆசிரியர் பெயர் : ரா.கி .ரங்க ராஜன்

ஆசிரியர் குறிப்பு :


ரா.கி ரங்கராஜனின் தமிழ் நடை , நீரோட்டமான இனிய நடை தங்கு தடையின்றி செல்கிறது . அந்நிய நாட்டில் நடக்கும் பிற மொழி கதையாயினும் அந்த உணர்வு தோன்றாமல் இந்நிலத்தில் தோன்றிய பெரிய காப்பியம் போல  இம்மொழி பெயர்ப்பை நடத்தியுள்ளார்
ரங்கராஜன் சுதந்திரம் வந்த புதிதிலிருந்தே புத்தகம் எழுதி வருகிறார் என்பது என் அணு மானம் ,ஆரம்ப காலங்களில் அவர் கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதினார்.இவருடைய புத்தகங்கள் பல்லக்கு என்ற புத்தகமாக வெளிவருகிறது. துவக்க நாட்களிலேயே குமுதம் நிறுவனத்தில் சேர்ந்து அவர்கள் கல்கண்டு பத்திரிகையுடன் வெளிவிட்டார்.டி. துரைசாமி எழுதிய துப்பறியும் கதைகளும், கிருஷ்ண குமார் திகில் கதைகளும், மாலதி குறும்பு கதைகளும்,'அவிட்டம் " நையாண்டி கதைகளும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது

நூற்குறிப்பு
 

பிரஞ்சு மொழியில் இருந்து பாபில்லான் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க பெற்று பல இலட்ச கணக்கான பிரதிகள் விற்பனையான உண்மை கதை . மற்ற எல்லா மொழிகளிலும் வெளிவந்து கோடிகணக்கான வாசகர்களை கவர்ந்தது ,ஸ்டீவ் ,டஸ்டின் ஹாப்மேன் நடித்த திரைப்படமாகவும் வெளிவந்தது

மனிதனின் தாக்கு பிடிக்கும் ஆற்றலுக்கும் விடா முயற்சிக்கும் சுதந்திர தாகத்திற்கும் ஒரு மகோன்னதமான வாழும் எடுத்து காட்டு 1931 -ம் ஆண்டு கொலையொன்றை செய்ததாக அவன் மீது குற்றம் சாற்ற பட்டு ஆயுள் முழுவது தீவாந்தர சிறில் கழிக்க வேண்டும் எண்டு தண்டனை வழங்கப்பட்டது . கொலை செய்யவில்லை என்பது அவன் கட்சி பதின் மூன்றாண்டு காலத்திற்கு சிறை சிறையாக அவன் தப்பி கொண்டிருந்தான் . ஒரு கொலை காரன் எழுதிய புத்த கமாக இருந்தாலும் தணிக்க முடியாத சுதந்திர உணர்வையும் துன்பத்தை தாங்கி கொள்ளும் மனத்திண்மையையும் ,தைரியத்தையும் எடுத்துகாட்டுகின்ற மாபெரும் மானிட சாசனம் இது.

உள்ளடக்கம் :
 

மயிர் கூச்செறிய வைக்கும் மானிட சாசனம் -ஹென்றி ஷாரியர்
 

பக்கங்கள்   :855

BOOK NAME                : PattamPoochi

BOOK WRITER        : Ra.Ki.Rangarajan,

BUY ONLINE           :available this tamil book.


BOOK REVIEW    :

 

பட்டாம் பூச்சி – கென்றி ஷாரியர் எழுதிய Papillon என்னும் பிரெஞ்சு நூலின் ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில் பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன் – 800 பக்கங்களைத் தாண்டும் இந் நூலினை அண்மையில் வாசித்துக் கொண்டிருந்த போது மயிர்கூச்செறிதல் என்று சொல்வார்களே – அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன்.
நூலின் ஆசிரியர் தனது இருபத்தைந்தாவது வயதில் கொலைக் குற்றமொன்றிற்காக ( செய்யாத கொலையென்கிறார் ஆசிரியர்) ஆயுட் தண்டனை பெற்று அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் படுகிறார்.
அடுத்த 13 ஆண்டு காலத்திற்கு அவர் ஒவ்வொரு சிறையாகத் தப்பித்துக்கொள்கிறார். தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமாக 13 வருட காலத்தை, அவர் தனது விடுதலை மீதான இலக்கில் மீண்டும் மீண்டும் செலவிடுகிறார். கொடிய தீவுச் சிறைகளில் இருந்து புதைமணலிலும், ஒட்டைக்கட்டுமரங்களிலும் தப்பிப்பதுவும், மீண்டும் அகப்பட்டு இருண்ட தனிமைச்சிறைகளில் அடைக்கப்படுவதும், அதிலிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சிப்பதுமாக விரிகிறது கதை.
Write your own product review

Product Reviews

  1. great great wonderful novel

    Posted by mohanraj.k on 22nd May 2012

    till now i ever read this kind of fantastic story. i need same thrilling books.......


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the பட்டாம் பூச்சி to your wish list.

You Recently Viewed...