Loading... Please wait...

Category

Our Newsletter


சதுர்புஜன் கவிதைகள்

  • பாஸ்கர் எஸ்.ஐயர் என்ற இயற்பெயரும் தன்னுடைய மகன் பெயரை புனைபெயராகக் கொண்டவரான ஜி.பி. சதுர்புஜனை ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளராக கல்கி, மங்கையர் மலர் வாசகர்கள் நன்கு அறிவார்கள். தன்னுடைய அமராவதிநகர் சைனிக் பள்ளி, மற்றும் பிட்ஸ் பிலானி கல்லூரி நாட்களிலேயே ஆங்கில வழிக் கல்வி பயின்றிருப்பினும் தமிழிலே ஆர்வம் கொண்டு, தன்னுடைய தமிழ் எழுத்துப் பயணத்தையும், குறிப்பாக, கவிதை எழுத்துப் பயணத்தையும் தொடங்கியவர் சதுர்புஜன்.
Price:
Rs.150.00
Cash on delivery availability:
Weight:
325.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

பாஸ்கர் எஸ்.ஐயர் என்ற இயற்பெயரும் தன்னுடைய மகன் பெயரை புனைபெயராகக் கொண்டவரான ஜி.பி. சதுர்புஜனை ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளராக கல்கி, மங்கையர் மலர் வாசகர்கள் நன்கு அறிவார்கள். தன்னுடைய அமராவதிநகர் சைனிக் பள்ளி, மற்றும் பிட்ஸ் பிலானி கல்லூரி நாட்களிலேயே ஆங்கில வழிக் கல்வி பயின்றிருப்பினும் தமிழிலே ஆர்வம் கொண்டு, தன்னுடைய தமிழ் எழுத்துப் பயணத்தையும், குறிப்பாக, கவிதை எழுத்துப் பயணத்தையும் தொடங்கியவர் சதுர்புஜன்.

நல்ல கவிதைக்கு வெகுனை வார, மாத இதழ்களில் குறைந்த இடமும் கவனமும் அளிக்கப்பட்ட சூழலில், எழுதிய சில நூறு கவிதைகளில் மிகச் சிலவற்றையே இதுவரை வெளியிட்டுள்ளார் இவர். ஆனாலும், இந்த இடைப்பட்ட காலத்தில், இவருடைய கவிதைகள் கணையாழி, கலைமகள், அமுதசுரபி, குமுதம் ஜங்ஷன், மங்கையர் மலர் போன்ற பல முன்னணி தமிழ் இதழ்களில் அவ்வப்போது இடம்பெற்றுள்ளன.

மேற்கண்ட இதழ்களில் கிட்டத்தட்ட 40 சிறுகதைகளை எழுதி வெளியிட்டுள்ள இவர், ஜனவரி 2011 இல் இவற்றைத் திறம்படத் தொகுத்து, ‘சதுர்புஜன் சிறுகதைகள்’ என்ற பெயரில் திரிசக்தி பிரசுரம்  சென்னை மூலம் வெளிக்கொணர்ந்தபோது, அந்தப் புத்தகம் பரவலான கவனத்தைப் பெற்றது. டிசம்பர்-2001 இல் கல்கி இதழில் வெளிவந்த ‘குழந்தை மட்டும்’ என்ற இவரது சிறுகதை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதையென தேர்வு செய்யப் பட்டது.

கவிதை என்று வரும்போது, அமுதசுரபி, கலைமகள் போன்ற இதழ்கள் அவ்வப்போது சதுர்புஜனுடைய கவிதைகளைப் போட்டிகளில் பரிசு பெறும் கவிதைகளாக தேர்ந்தெடுத்து பெருமைப் படுத்தியுள்ளன.

இவ்வாறு தமிழில் சிறுகதை, கவிதை என்ற இரண்டு தளங்களிலும் தடம் பதித்துக் கொண்டிருக்கும் இவர், வணிகம், தொழில் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் முன்னணி ஆங்கில இதழ்களில் வெளியிட்டுள்ளார். மைன்ட்ஸ்கேன் என்ற சந்தை ஆய்வு நிறுவனத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் வெற்றிகரமாக நடத்தி வரும் இவர் மேற்கு மாம்பலவாசி. மனைவி பி.ஆர்.கிரிஜா, அசோக்நகர் கேந்த்ரீய வித்யாலயா பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியை. மகன் ஜி.பி.சதுர்புஜன் தற்போது, காக்னிஸன்ட்-சென்னையில் மென்பொருள் துறையில் பணி புரிகிறார்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the சதுர்புஜன் கவிதைகள் to your wish list.

You Recently Viewed...