Loading... Please wait...

Category

Our Newsletter


காடு

  • அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது
Price:
Rs.430.00
Cash on delivery availability:
Weight:
700.00 Grams
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது

 

காடு- ஜெயமோகன். தமிழினி

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

  1. என் வாழ்வில் மாற்றம் தந்த காடு

    Posted by Dr.M.Sivasankar on 14th Sep 2012

    நான் ஒரு முனைவர். இயந்திரப்பொறியியல் துறையில் உயிரியக்கவியலில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வினை இந்திய தொழில்நுட்ப கழகம் குவஹாத்தி, அசாமில் ஆய்வ்ய் செய்துகொண்டிருந்த நேரம். ஐந்து வருடங்கள் முடியும் நிலையில், இனி அவ்வளவுதான், ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு வீடு திரும்பலாம் என்று நினைத்திருந்த வேளையில் என் உடன் ஆராய்ச்சியிலிருந்த முனைவர்.முத்துக்குமரன் அவர்கள் ஒரு இரவினில் வாசிப்பதற்காக எனக்கு கொடுத்த காடு நாவல், என் வாழ்வினை புரட்டிப்போட்டது. ஸ்ரீதரன் அந்த காட்டினுள் சிக்கித்தவித்து வெளியே வரமுடியாதோ என்று பீதியுற்ற நிலையில், ஆசிரியர் அதனை கொண்டுசென்ற விதம், அடடா....இன்னும் சிறிது நேரத்தினில் விடிந்துவிடும், நான் நிற்கும் இடத்திற்கு பத்தடிபின்னர் கூட ஒரு சாலை தெரியலாம், ஆனால் வழியை கண்டுபிடித்த பிறகு இந்த காட்டினை அனுபவிக்க முடியாது, எனவே வழிதெரியும் முன்னரே எப்படியும் விடிந்துவிடும் என்ற எண்ணத்தில் வாழ்வினை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தினை என்னுள்ளும் ஸ்ரீதரனுள்ளும் ஏற்படுத்தி இன்று ஒரு பேராசிரியனாக, ஆய்வாளனாக, முனைவனாக என்னை வாழவைத்துக்கொண்டிருக்கும் காட்டிற்கும், அதனாசிரியர் திரு.ஜெயமோகனுக்கும் கோடானுகோடி நன்றி....


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the காடு to your wish list.

You Recently Viewed...