Loading... Please wait...

Category

Our Newsletter


அத்தருணத்தில் பகைவீழ்த்தி

  • அத்தருணத்தில் பகைவீழ்த்தி
Price:
Rs.100.00
Cash on delivery availability:
Weight:
150.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

அகரமுதல்வன் தன் கவிதைகளை ஆயுதமாக்க முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சியில் முதல்கட்ட பயிற்சி வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஈழத்து மக்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அனுபவித்த துயரங்களை மற்ற கவிஞர்களைப்போலவே அழகாக பதிவு செய்திருக்கிறார். நேரில் பார்த்தவன் என்ற முறையில் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.
இவருடைய எழுத்தில் ஒரு தனித்துவம் தெரிகிறது. அதைத்தான் என்போன்ற நண்பர்கள் அவரை பாராட்டவும் ஊக்கப்படுத்தவும் வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.
     அகரமுதல்வன் எழுதிய இந்த நூலை படிக்கும்பொழுது ஒரு விஷயம் நன்றாக புரிகிறது. இவர் தன்னுடைய கவிதைகள் அனைத்திலும் ஒரே விஷயத்தைத்தான் வலியுறுத்துகிறார். அது, ஈழத்தில் நடந்த அவலங்களை பார்த்த்தனால் அவருக்குள் எழுந்த கோபமும் ஆதங்கமும்தான். அதுதான் அவருக்குள் இருக்கும் கவிஞனை எழுதத் தூண்டியிருக்கிறது.
     என் கோபம் எல்லாம்
     உன்னை தீ தீன்றுவிடக் தொடுத்தவர் மீதுதான்
     உன்னை விதைத்து இருக்கவேண்டும்
என்ற வரிகளே போதும் அதற்கு அத்தாட்சி.
     ஆனால் என்னை மிகவும் கவர்ந்த்து அவருடைய எழத்துக்களில் ஆங்காங்கே தலைகாட்டும் நம்பிக்கைதான்.   
     விழித்தெழ மறப்பவர் வீழ்வார் என்பதே
     விரிந்துகிடக்கும் வரலாறு.
என்று ஒரு இடத்திலும்
சாவுகளுக்கு அஞ்சுவோர்
சாதித்துவிட முடியாது.
என்று இன்னொரு இடத்திலும்   
என் எழுதுகோல்
கவிதை எழுதுகிறது
இப்போது இலையுதிர் காலம்தான்
வசந்தகாலத்திற்காய்
என்று முடிவாகவும் இடம்பெற்ற வரிகள் இதற்கு உதாரணங்கள்தான் என்றால்
நினைத்துப்பாருங்கள்
இருட்டிற்கு விளக்கேற்றினாலே
மிரட்டும் வாழ்விருக்க
நாட்டிற்கு விளக்கேற்றும் நாள் வருதல்
என்ற வரிகள் நம்பிக்கையின் உச்சத்தை தொடுகிறது.
     சமூகத்தின் மீது அகரமுதல்வன் கொண்ட ஆதங்கம் இன்னொரு தளத்தில்
கையில் நோக்கியா
பள்ளிக்கூடத்தில் சிகரெட்
கோவிலில் விபசாரம்
பேருந்தில் சில்மிஷம்
வீட்டுக்குள் கொள்ளை
தெருவில் வன்புணர்வு
போன்ற வரிகளாக சாதாரண வாசகர்களையும் சிந்திக்க வைக்கும்.
நான்கு வரிகளில் நச்சென்று சொல்லவந்த்தை சொல்ல அகரமுதல்வனாலும் முடியும் என்பதற்கு
ஈழத்தில்
தாலாட்டு பாடியும்
தூங்காது குழந்தை
ஒப்பாரி அடமழையில்
என்ற வரிகள் சாட்சி. இவை படிப்பவர்களின் மனசாட்சியை தொட்டு எழுப்பும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அகரமுதல்வன் தன் கவிதைகளை ஆயுதமாக்க முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சியில் முதல்கட்ட பயிற்சி வெற்றியும் பெற்றிருக்கிறார்.  

ஈழத்து மக்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அனுபவித்த துயரங்களை மற்ற கவிஞர்களைப்போலவே அழகாக பதிவு செய்திருக்கிறார்.

நேரில் பார்த்தவன் என்ற முறையில் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.இவருடைய எழுத்தில் ஒரு தனித்துவம் தெரிகிறது. அதைத்தான் என்போன்ற நண்பர்கள் அவரை பாராட்டவும் ஊக்கப்படுத்தவும் வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.
 இவர் தன்னுடைய கவிதைகள் அனைத்திலும் ஒரே விஷயத்தைத்தான் வலியுறுத்துகிறார். அது, ஈழத்தில் நடந்த அவலங்களை பார்த்த்தனால் அவருக்குள் எழுந்த கோபமும் ஆதங்கமும்தான். அதுதான் அவருக்குள் இருக்கும் கவிஞனை எழுதத் தூண்டியிருக்கிறது.    

 “என் கோபம் எல்லாம்
உன்னை தீ தீன்றுவிடக் தொடுத்தவர் மீதுதான்!
உன்னை விதைத்து இருக்கவேண்டும்! “  

என்ற வரிகளே போதும் அதற்கு அத்தாட்சி.    

 மிகவும் கவர்ந்த்து அவருடைய எழத்துக்களில் ஆங்காங்கே தலைகாட்டும் நம்பிக்கைதான்.        

 

 

 

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the அத்தருணத்தில் பகைவீழ்த்தி to your wish list.

You Recently Viewed...