Loading... Please wait...

Category

Our Newsletter


EVEN THE RAIN Film Screening

Posted on 8th Apr 2015 @ 3:30 PM

சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பலவழிகளில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முயன்று வருகிறது. கலைகளை அதற்கு பயன்படுத்துவது தொடர்ச்சியான ஒரு செயல்பாடு. சூழல் குறித்த பல திரைப்படங்களை தேர்வு செய்து, சென்னை கே.கே. நகரில் உள்ள " புத்தக நிலையத்துடன் இணைந்து திரையிட உள்ளார்கள். அதன் முதல் படியாக வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி ஞாயிறு (காலை 10.30 மணிக்கு) "even the rain " என்கிற அழுத்தமான திரைப்படம் திரையிடப்படும். இந்த படம் "தண்ணீருக்கான" ஒரு மிகப்பெரிய போரை நடத்திய பொலிவிய மக்களை பற்றிய படம். தண்ணீருக்கு எப்படி தனியார் நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடி "மழை நீரைக்" கூட புடிக்க விடாமல் மக்களை அடிமைப்படுத்தி தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க, அதற்கு எதிராக கொச்சபம்பாவில் தொடங்கிய போராட்டம் "evo marles" பொலிவிய அதிபராக வந்து அமர வழிவகுத்தது.

வாருங்கள் அனைவரும் அறிவோம் தண்ணீருக்கான அரசியலை...

APRIL 12, Sunday, 10.30am, Discovery Book Palace, KK.Nagar, Chennai